தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான படங்கள் | Kadaisi vivasayi | Allu Arjun | Alia Bhatt

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஏற்பாட்டில், 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். 2021ஆம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட படங்களில், சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி, சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி படமும், மிக பிரபல படமாக ஆர்.ஆர்.ஆர். படமும் தேர்வு செய்யப்பட்டன. மேலும், சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன், சிறந்த நடிகையாக ஆலியா பட், கீர்த்தி சனோன் தேர்வு செய்யப்பட்டனர். பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக 'சிற்பங்களின் சிற்பங்கள்' படம் அண்மையில் தேர்வு செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com