பிரபல நடிகையை பிறழ் உறவுக்கு அழைத்த தயாரிப்பாளர்கள்.. அதிர்ச்சியில் டோலிவுட் | Fatima Sana Shaikh
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது டோலிவுட் தயாரிப்பாளர்கள் தன்னை மறைமுகமாக 'பிறழ் உறவிற்கு' அழைத்தாக தங்கல் பட நடிகை பகிர் தகவல் ஒன்றை கூறியுள்ளார். ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தின் மூலம் பரவலான கவனம் ஈர்த்தவர் நடிகை ஃபாத்திமா சானா ஷைஃக். தற்போது, ஆ. மாதவன் நடிக்கும் ஆப் ஜெய்ஸா கோய் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், ஹைதராபாத் காஸ்டிங் ஏஜண்ட் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர் தன்னை பிறழ் உறவிற்கு ஒப்புக் கொடுக்கும்படி மறைமுகமாக பேசியதாக கூறியுள்ளார். சில டோலிவுட் தயாரிப்பாளர்களும் அதே போன்று பேசியதாகவும் நடிகை ஃபாதிமா சானா ஷைஃக் கூறியுள்ளார். இந்த பேட்டி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
