பேசில் ஜோசப் திரைப்படத்திற்கு தடை.. குவைத், சவுதி அரேபியா நாடுகள் அதிரடி
Good... Bad.. Ugly... திரைபடத்துக்கு போட்டியா ரீலிஸான மரணமாஸ் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கு... தன்பாலின ஈர்ப்பாளர்கள Cast பண்ணதுக்கும், திரைப்படத்த வெளியிட விடாம Ban பண்ணதுக்கும் என்ன தொடர்பு ?
மலையாள ஃபிலிம் இன்டஸ்ட்ரி கடந்த சில வருடங்களாவே தொடர் தோல்விகள சந்திச்சுட்டு வருது...
உதாரணமா சென்ற மார்ச் மாதம் வெளியான 17 திரைப்படங்கள்ல எம்புரான் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ்ல Successful-ஆ ரன் ஆகி இருக்கு...
இந்த சூழல்ல தான்..., இவர் ஹிரோவா நடிச்ச படம் மட்டும் எப்போ ரீலீஸ் ஆனாலும், அது எப்படி ஹிட் ஆகுதுனு ? சேட்டன்ஸ் எல்லாரையும் Doubt-டோட பார்க்க வெச்ச மரணமாஸ் ஸ்டார் தான் இந்த பசில் ஜோசப்.
2015 ல டைரக்டர்ர அறிமுகம் ஆகி இருந்தாலும் பசில் ஜோசப் கேரியர்ல Breakthrough –வ அமைஞ்சது கடந்த 2021 ம் ஆண்டு வெளியான மின்னல் முரளி திரைப்படம் தான்.
மின்னல் முரளியோட Electrifying Hit –அ தொடர்ந்து பசில் ஜோசப் Main Lead-ல நடிக்க ஆரம்பிச்சாரு.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே... குருவாயூர் அம்பலநடையில்.. சூக்ஷமதர்ஷிணி... இப்படி பசில் ஜோசப் நடிச்ச பல திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸ்ல பட்டைய கிளப்புச்சு.
சென்ற ஜனவரி மாதம் பசில் நடிப்புல வெளியான பொன்மேன் ( Ponman ) திரைப்படமும் அகில உலக அளவுல வெற்றி பெற்றது... அதன் காரணமா அவரோட Upcoming Film-ஆன மரணமாஸ் திரைப்படத்துக்கும் ஆடியென்ஸ் மத்தியில Huge Expectation உருவாகி இருந்தது.
இந்த சூழல்ல தான், ஏப்ரல் 10 ம் தேதி, தமிழ்ல வெளியாகியுள்ள நடிகர் அஜித் குமாரோட Good Bad Ugly-க்கு போட்டியா மரணமாஸ் திரைப்படமும் World Wide Release செய்யப்பட்டு இருக்கு.
ஆனா, ஐக்கிய அரபு நாடுகளான குவைத் மற்று சவுதி போன்ற நாடுகள்ல மரணமாஸ் திரைப்படத்த அந்நாட்டு அரசாங்கம் Ban பண்ணி இருக்காங்க.
அதற்குரிய காரணமா.. LGBT Queer சமூகத்த சேர்ந்த ஒருவருக்கு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதால அந்த திரைப்படத்த எக்காரணத்த கொண்டும் எங்க நாட்டுல வெளியிட அனுமதிக்க மாட்டோம்னு சவுதில ரொம்ப Strict-ஆ சொல்லி இருக்காங்க.
அதே நேரம், குவைத் தணிக்கை குழுவினர் சர்ச்சைக்குரிய அந்த கதாபாத்திரத்தோட காட்சிகள மட்டும் கட் பண்ணிட்டு படத்த வெளியிட அனுமதி கொடுத்திருக்காங்க. அதன்காரணமா, படக்குழுவினர் மூலமா சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது தொடர்பா குவைத்ல ரசிகர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம அந்த காட்சிகள் படத்துல இருந்து தூக்கப்பட்டதால குவைத்ல படம் பார்க்கக்கூடிய ஆடியென்ஸுக்கு பெரிய அளவுல ஸ்டோரில Jump தெரியாதுனும் நம்பிக்கை தெரிவிச்சு இருக்காங்க...
இந்த சர்ச்சைக்குறித்து ஊடங்கங்களோட கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ள இயக்குனர் சிவபிரசாத். Gender Identity-ய மையமா வெச்சி அந்த கதாப்பாத்திரம் எழுத படலனு தெரிவிச்சது மட்டுமில்லாம, LGBTQ Community-ல உள்ளவங்களையும் நம்மளோட பொது சமூகம் ஆதரிக்கனும்னு வலியுறுத்தி இருக்காரு...
LGBTQ – சமூகத்த சேர்ந்த ஒரு நபர்நடிச்ச காரணத்தாலயே சவுதி அரேபிய அரசாங்கம் திரைப்படத்துக்கு தடை விதிச்சு இருக்கிறதால ஆடியென்ஸ் Disappoint ஆனது மட்டுமில்லாம... இப்ப அகில உலக Angry Young Star-ரோட Fans சவுதி சென்சார் போர்ட்டு மேல கடும் கோபத்த கமெண்ட்ல வெளிபடுத்திட்டு இருக்காங்க..