

நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சிவகுமாருடன் சேர்ந்து போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை அவர் தட்டி விட்டு இயல்பாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரசிகர் ஒருவரின் செல்போனை பொது இடத்தில் தட்டி விட்டு அந்த காட்சிகள் சர்ச்சையானது. இதுதொடர்பாக சிவகுமார் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது...