சமந்தாவுக்கு கோவில், சிலை.. பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர் - வைரல் வீடியோ!
நடிகை சமந்தா ஹாப்பியா பிறந்தநாள் கொண்டாடி முடிச்சிருக்க, அவரோட வெறித்தனமான ரசிகர் ஒருவரும் சமந்தா பிறந்தநாள ரொம்ப பிரமாண்டமா கொண்டாடியிருக்காரு.
ஆந்திராவுல பாப்டலா மாவட்டம் ஆளப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவரு சந்தீப்.
சமந்தாவோட ரசிகனா தன்னை முன்னிலைப்படுத்துன இவரு, 2023ஆம் ஆண்டு சமந்தாவுக்கு பிரமாண்ட கோயில் கட்டி, அதுல அவரோட சிலையை வச்சி வழிபட்டுட்டு வராரு.
வருஷா வருசம் சமந்தா பிறந்தநாளை திருவிழாவா கொண்டாடிட்டு வர சந்தீப், இந்த வருஷ பிறந்தநாளுக்கு தான் கட்டுன கோயில்ல புதுசா சமந்தாவுக்கு சிலையை திறந்து வச்சு ஆதரவற்ற குழந்தைங்களோட சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமா கொண்டாடிருக்காரு...
இதுமட்டுமில்லாம, குழந்தைகளுக்கு உணவு வழங்கி பசியாற்றி நெகிழ்ந்திருக்காரு.
சமந்தாவோட அதிதீவிர ரசிகனோட இந்த வீடியோ ஆந்திராவை தாண்டி தேசிய அளவுல கவனத்தை ஈர்த்துடுச்சி...
