பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா 41 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் உறவினருகும் நடிகருமான விஜய் ராகவேந்திரா கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்பந்தனாவை மணமுடித்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஸ்பந்தனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இந்தியா கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com