"அடாது மழை பெய்தாலும், விடாது இசை நிகழ்ச்சி நடக்கும்"

x

கோவைப்புதூர் பகுதியில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி ஜூன்-7-ல் நடத்துகிறார். கடந்த மே மாதம் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் ஜூன் ஏழாம் தேதி இசை நிகழ்ச்சி நடக்கும் என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கோவை நீலகிரி மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழையின் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இசமையப்பாளர் இளையராஜா அது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மழை வந்தாலும் இசை நிகழ்ச்சியில் தன்னுடைய இசையை கேட்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி இசை நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்