எந்திரன் படக்கதை விவகாரம் : கலாநிதிமாறன் மீதான வழக்கு ரத்து

எந்திரன் படக்கதைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமை சட்டத்தின் படி, வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எந்திரன் படக்கதை விவகாரம் : கலாநிதிமாறன் மீதான வழக்கு ரத்து
Published on

2010 ஆம் ஆண்டு எந்திரன் படம் வெளியானபோது, அந்த படத்தின் கதை தன்னுடையது எனவும், நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய் தர வேண்டுமெனவும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் ஷங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, கலாநிதி மாறன் தயாரிப்பாளர் என்பதால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஆரூர் தமிழ்நாடான் எழுதிய 'ஜூகிபா' மற்றும் 'எந்திரன்' கதையில் பல்வேறு ஒற்றுமையுள்ளதால் காப்புரிமை சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு பதிய முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதி கூறினார். இதனால் அவர் மீதான காப்புரிமை சட்டப்பிரிவு வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com