ஊழியரின் weddingகாக சிங்கப்பூரிலிருந்து பறந்த பாஸ் - மணமக்களுடன் ரதத்தில் வந்த காட்சி - ஊரே வியந்து பார்த்த நெகிழ்ச்சி சம்பவம்
ஊழியரின் திருமணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த முதலாளியை சாரட் வண்டியில் அழைத்து கவுரவப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனவேல். இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சொந்த ஊரில் நடைபெற்ற தனவேலின் திருமணத்திற்கு, அவர் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிங், தனது மனைவி எஸ்தர் மற்றும் பொது மேலாளர் மார்க்கோ ஆகியோருடன் சிங்கப்பூரல் இருந்து வருகை புரிந்தார். ஊழியரின் திருமணத்திற்கு இந்தியா வந்தவர்களை, கிராம மக்கள் சாரட் வண்டியில் அழைத்து வந்து மரியாதை செலுத்தினர். தமிழரின் பாரம்பரிய உடையை அணிந்து, மணமக்களை வாழ்த்திய அவர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு புழுக்கம் ஏற்பட்ட நிலையில், நிர்வாக இயக்குனர் மிங், விசிறியால் விசிறிவிட்டபடி நின்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
