“ஜனநாயகன்“ படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்க பரிந்துரை

“ஜனநாயகன்“ படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்க பரிந்துரை
Summary

விஜய்யின் ஜனநாயகன் படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் சென்சார் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது.

டிசம்பர் மாதமே படத்தை சென்சார் போர்டு குழுவினர் பார்த்துவிட்டாலும், சான்றிதழ் தரவில்லை. மதம், ராணுவம், அரசியல் தொடர்பான சர்ச்சை காட்சிகள் காரணமாக சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ஜனநாயகன் பல தடைகள் காரணமாக தாமதமாகி வருகிறது.

சமீபத்தில் மும்பையில் நடந்த ரீ-சென்சார் பரிசீலனையில், விஜய் தேர்தலில் போட்டியிட உள்ளதால், இந்தப் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகளும் பார்க்க வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், தேர்தலுக்குப் பிறகே படம் வெளியாகும் நிலையில், இப்போது ஏன் தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால், ‘ஜனநாயகன் வெளியீடு மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com