`தக் லைஃப்’ டிரெய்லர் எப்போது ரிலீஸ் தெரியுமா? - படக்குழு அறிவிப்பு
வர 17ஆம் தேதி தக் லைஃப் படத்தோட டிரெய்லர் வெளியாக இருக்குறதா சூப்பர் அப்டேட்டை டீம் கொடுத்திருக்கு.
நாயகன் படத்துக்கு அப்புறம் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையுறதுநாளயே இந்த படத்து மேல செம்ம எதிர்பார்ப்பு இருக்கு. கூடவே சிலம்பரசன், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர்னு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்குறாங்க..
இவங்களோட மியூசிக்கல் டிரீட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் தயாராக, அண்மையில் ஜிங்குச்சா பாட்டு அதுக்கு ஒரு டீசர் மாதிரி செம்ம ஹிட் ஆச்சு.
படம் அடுத்த மாசம் 5ஆம் தேதி ரிலீசாக இருக்க, தீவிர புரமோசன்ல இறங்கியிருக்கு தக் லைஃப் டீம்... இதுக்கு முன்னோட்டமா டிரெய்லரை வர 17ஆம் தேதி இறக்கப்போறாங்க...
அதுக்கப்புறம் மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத்ல டிரெய்லர் LAUNSH EVENT...
தொடர்ந்து, சென்னையில மே 24ஆம் தேதி பிரமாண்டமா இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்குறதா படக்குழு அறிவிச்சிருக்கு.
இதுமட்டுமில்ல, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், மலேசியா துபாய்னு அடுத்தடுத்து புரமோசன் தான்னு தேதிய லிஸ்ட் போட்டு புரமோசனுக்குனு ஒரு புரமோசன் வீடியோவ விட்ருக்கு தக் லைஃப் டீம்...
ஆக, அடுத்த ஒரு மாசத்துக்கு தக் லைஃப்தான் ஹாட் டாபிக்....
