படப்பிடிப்பில் நடந்த தீபாவளி celebration..நடிகர் விஷால் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

x

தீபாவளி பண்டிகையை ஒட்டி, படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் சமபந்தி கறி விருந்து அளித்தார். இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால்-34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினமான இன்றும் படப்பிடிப்பு நடைபெற்றதால், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் விஷால் சார்பில் சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்க வேண்டும் என்று கூறி வரும் நடிகர் விஷால், அதை செயல்படுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்