Diwakar Makapa Pugal Issue| சிரித்து கொண்டே திவாகருக்கு வெடி வைத்த மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத்
துணை நடிகர் திவாகர் அளித்த புகாரில் நடிகர் மா.கா.பா. ஆனந்த், சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சோசியல் மீடியா பிரபலமான திவாகர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையத்தில் 2 தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக சென்ற தன்னை, மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ், அசார் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு இரும்பு கம்பியால் தாக்கியதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகாரில், துணை நடிகர் புகழ், கானா வினோத் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் மாகாபா ஆனந்த் உள்ளிட்ட 4 பேரும் வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர். அப்போது பேசிய மாகாபா ஆனந்த் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டென்டுக்காக திவாகர் இது போன்ற செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தார். மேலும், திவாகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்களை தரைகுறைவாக பேசியதாக கானா வினோத்தும் குற்றம்சாட்டியுள்ளார்.
