Vijay Birthday | விஜய் சந்திக்காததால் ரசிகர்கள், கட்சியினர் ஏமாற்றம்

x

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்தவர்களை, தவெக தலைவர் விஜய் சந்திக்காமல் சென்றதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய இல்லம் முன்பு காலை 8 மணியில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் காத்திருந்தனர். மதியம் 3 மணியளவில் விஜய்யின் கார் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அவரை பார்க்க ரசிகர்களும் தொண்டர்களும் ஆவலுடன் காரை நோக்கி ஓடினர். ஆனால், கார் நிற்காமல் சென்றதுடன், காரின் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் அவர்களால் விஜய்யை பார்க்க முடியாமல் போனது. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்