திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது.
திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
Published on

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் நிலையில், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பாக்யராஜ் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 3000 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில், 2400 வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும், இயக்குநர் சங்கத்தின் பொன்விழா நடைபெற உள்ள நிலையில் பாரதிராஜா தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்வது தவறான தகவல் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com