

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணையும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பின் தொடக்க விவரம், பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.