"சூர்யா என்னை நம்பிருக்கலாம்"-கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம்..ஓபன் ஆக போட்டுடைத்த கௌதம் மேனன்
துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க சூர்யாவைக் கேட்டபோது அவர் அதில் நடிக்க யோசித்திருக்கவே கூடாது என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வருத்தம் தெரிவித்துள்ளார்... ஏனெனில் வாரணம் ஆயிரம், காக்க காக்க படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில் சூர்யா தன்னை நம்பியிருக்கலாம் என்றும், தான் முடிந்தவரை எவ்வளவோ சம்மதிக்க முயற்சித்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்... பல்வேறு சிக்கல்களால் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில், படம் கண்டிப்பாக ரிலீசாகும் என கௌதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
Next Story
