பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் "தேவரா" ரிலீஸ்

பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் "தேவரா" ரிலீஸ்
Published on

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான "தேவரா"

பெரும் எதிர்பார்ப்புக்கும் மத்தியிலும், ஆரவாரத்திற்கும் இடையிலும் வெளியாகி இருக்கிறது ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா திரைப்படம்...

பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது தேவரா...

பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் "தேவாரா" ரிலீஸ்

பிரமிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகள், மிரளச் செய்யும் மேக்கிங், ட்ரைலர் என ரசிகர்களை இத்திரைப்படம் அதிர வைத்திருந்த நிலையில், தற்போது படம் பார்க்க வந்தவர்களின் அலப்பறையில், ஆந்திராவும், தெலங்கானாவும் பதறிப்போயிருக்கிறது...

தொழில்நுட்ப காரணங்களால் திரையிட தாமதம் - திரையரங்கம் சூறையாடல்

தெலங்கானாவில் உள்ள திரையரங்கில், அதிகாலை 5.30 மணிக்கு வெளியாக வேண்டிய திரைப்படம், சில தொழில் நுட்ப காரணங்களால் 7.30 க்கு வெளியாகி இருக்கிறது..

இதனால், பொறுமையிழந்துபோன ரசிகர்கள், திரையரங்கை அடித்து நொறுக்கி சூறையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

மிருக பலி கொடுத்து, படத்தை வரவேற்ற ரசிகர்கள் - அதிர்ச்சி

இது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் திரையங்கம் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர்கள், திடீரென ஆடு ஒன்றை பலிகொடுத்து, அதன் ரத்தத்தை ஜூனியர் என்.டி.ஆர் புகைப்படத்தின் மேல் ஊற்றியது சம்பவ இடத்தை அதிரச் செய்தது...

இதன் வரிசையில்தான் இந்த சம்பவம்..

ஹைதராபாத்தில், திரையங்கம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடி, தேவராவை அமர்க்களத்துடன் ரசிகர்கள் வரவேற்றிருக்கின்றனர்.

இதில், பட்டாசு பட்டு பக்கத்தில் இருந்த ஜூனியர் என்.டி.ஆர் கட் அவுட் மளமளவென தீப்பற்றி எரிந்தது திரையரங்கை பதற வைத்திருக்கிறது

X

Thanthi TV
www.thanthitv.com