நாதஸ்வர கலைஞர் மறைவு | Sivaji Ganesan | Thillaana Moganambal

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்தவர் பொன்னுசாமி... காரைக்குடியில் திருமண நிகழ்வொன்றில் நாதஸ்வரம் வாசித்த போது, தில்லானா மோகனாம்பாளில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது... கே.வி.மகாதேவன் இசையில் தில்லானா மோகனாம்பாளில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் முதல் ரகம்... நாதஸ்வர இசைக்கலைஞராகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன்... ஆனால் படத்தின் உயிரான நாதஸ்வர இசைக்கு சொந்தக்காரர்களில் ஒருவர் தான் எம்.பி.என்.பொன்னுசாமி... கேட்க கேட்க சலிக்காத இசையை வழங்கியவர் இன்று நம்முடன் இல்லை என்பது தமிழ்த் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com