அம்மாவின் பிரபல பட ரீமேக்கில் மகளா?

அம்மாவின் பிரபல பட ரீமேக்கில் மகள் - ஜான்வி கபூர் உற்சாகம்

தனது அம்மா ஸ்ரீதேவி நடித்த பிரபல படத்தின் ரீமேக்கில் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், சன்னி தியோல் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான படம் ‘சால்பாஸ்’. ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்த சால்பாஸ் பட சூப்பர் ஹிட்டாக, இந்தப் படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. படம் தொடர்பான முழு விவரங்கள் செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com