நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான 'தர்பார் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டுடியோவிற்கு சென்று டப்பிங் பணிகளை பார்வையிட்டு உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மேலும் படத்தின் பாடல்களுக்கான இசை நல்ல முறையில் அமைந்துள்ளதாக அனிருத்தை, ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தர்பார் படத்தின் முதல் பாடல் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்படுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.