நீங்கள் விருப்பப்படும் வகையில் செயல்பட வேண்டுமா? - இயக்குநர் முருகதாஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தர்பார் பட விவகாரம் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீங்கள் விருப்பப்படும் வகையில் செயல்பட வேண்டுமா? - இயக்குநர் முருகதாஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
Published on

தர்பார் படத்தின் நஷ்டம் தொடர்பாக, சில விநியோகஸ்தர்கள், தன்னை மிரட்டுவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இனி மிரட்டல்கள் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து, இயக்குனர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், புகார் மீது நடவடிக்கை தேவை இல்லை என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீங்கள் நினைத்தபடி உயர்நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? என முருகதாஸுக்கு கேள்வி எழுப்பி, வழக்கை முடித்து வைத்தார்.

--

X

Thanthi TV
www.thanthitv.com