ரஜினி நடித்த 'தர்பார்' பட விவகாரம் - "இரவுக்குள் சுமூகமான தீர்வு எட்டப்படும்"

தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே பிரச்சினை வெடித்துள்ள நிலையில், இன்று இரவுக்குள் சுமூகமான தீர்வு எட்டப்படும் என இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம், வரும் 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 75 சதவீத தியேட்டர் உரிமையாளர்கள் தர்பார் படத்தை இன்னும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, தர்பார் பட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க தியேட்டர் உரிமையாளர்களை விநியோகஸ்தர்கள் நிர்பந்திப்பதாக தகவல் வெளியானது. டிக்கெட் விலையில் அதிகளவில் விநியோகஸ்தர்கள் பங்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பிற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று இரவுக்குள் சுமூகமான தீர்வு எட்டப்படும் என இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com