Danush | தனுஷ் குறித்து பரவிய செய்தி - முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த்

சமீபத்தில் சீரியல் நடிகை மான்யா ஆனந்த்திடம் தனுஷின் மேலாளர் ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தான் நேர்காணலில் தனுஷின் மேலாளர் ஷ்ரெயஸ் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், போலி நபராக இருக்கலாம் எனவும் தான் தெரிவித்து இருந்தேன். தனுஷின் மேலாளர் என்று திட்டவட்டமாக தான் குறிப்பிடவில்லை என மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். எனவே யாரும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com