Court | Squid Game | பாலியல் விவகாரம் - பிரபல நடிகர் வழக்கில் திடீர் திருப்பம்... கோர்ட் அதிரடி
"ஸ்க்விட் கேம்" என்ற சீரிஸில் நடித்த ஓ யியோங்-சுவுக்கு எதிரான பாலியல் வழக்கின் தண்டனையை தென் கொரிய நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஓ யியோங்-சு 2017ஆம் ஆண்டு பெண் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதற்காக 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர், இதனால், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல என்று கூறினார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம் என்று கூறிய நீதிபதி, ஓ யியோங்-சுவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.
Next Story
