கூலி 'கல்யாணி' போட்ட திடீர் ட்வீட்
கூலி படம் மூலம் வரவேற்பு பெற்ற நடிகை ரச்சிதா ராம்- நன்றி கூறி பதிவு
கூலி திரைப்படத்தில் நடிகை ரச்சிதா ராம் நடித்த கல்யாணி என்கிற கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நன்றி தெரிவித்து ரச்சிதா ராம் சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த விமர்சனங்களாலும், அன்பாலும் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் மீடியாக்கள், விமர்சகர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் நன்றி எனவும், தனக்கு அந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஸ்பெஷல் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பல லெஜண்ட்-களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
Next Story
