யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன் பிரத்யேக போட்டி

யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன் பிரத்யேக போட்டி
Published on

உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலியான மின்மினி, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனமான U ONE Records இணைந்து U ONE VIBES என்ற போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட SHE IS A KILLER என்ற பாடலை பயன்படுத்தி, ரசிகர்கள் தங்களது படைப்பாற்றல் மூலம் வீடியோக்களை உருவாக்கி மின்மினி செயலியில் U ONE VIBES என்ற ஹாஸ்டேக்குடன் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி குறித்து வீடியோ வெளியிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா, மின்மினி செயலியின் பயனர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருப்பதாகவும், உடனடியாக திறமையை வெளிப்படுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் மின்மினி செயலியை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com