`கூலி' க்காக ஊழியர்களுக்கு லீவ் கொடுத்த நிறுவனம்
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று, ரஜினியின் 'கூலி' படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன் மூலம் ஹெச்ஆர் (HR) துறைக்கு அதிக அளவில் விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைக் தவிர்க்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ரஜினியிசம் 50வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வருகிற 14ஆம் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story
