நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் மரணம்

உடல் நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 45.
நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் மரணம்
Published on

நடிகர் வடிவேலுவை போலவே உடல் மொழியையும், குரலையும் மாற்றி பேசி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. மதுரையை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரையை தொடர்ந்து கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்தார். கை, கால்கள் செயலிழப்பு, இருதய கோளாறு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். போதிய பணவசதி இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com