"கம்பேக்னா இதாண்டா கம்பேக்.." மீண்டும் டாப் கியரில் பறக்கும் சிம்பு!

x

கொரோனா லாக்டவுன் தொடங்குற சமயத்துல நடிக்குறதையும் குறைச்சிருந்த சிலம்பரசன், உடல் பருமனாகி வீட்டுல முடங்குனாரு.

ஒரு கட்டத்துல உடல் எடை நூறு கிலோவ தாண்ட இனிமே இவர் நடிப்பாரானு சந்தேகம் எழுந்துச்சி. இந்த நேரத்துல மனுசன் வெறிகொண்டு WORKOUT போட்டு பழைய எஸ்.டி.ஆரா கம்பேக் கொடுத்தாரு.

சிலம்பரசனோட COMEBACK வீடியோவுக்கு தனி ஃபேன்ஸ் இருக்க, இப்ப திருப்பியும் ஒர்க்-அவுட் மோட்ல இறங்கி இது என்னோட MONDAY MOTIVATION-நு சொல்லி வீடியோவ ஷேர் பண்ணியிருக்காரு எஸ்.டி.ஆர்.

தக் லைஃப் படத்துல நடிச்சி முடிச்சிருக்க சிலம்பரசன், அடுத்ததா பார்க்கிங் இயக்குநர் ராம்குமாரோட சேர்ந்து நடிக்கிறாரு. அடுத்தது டிராகன் பட இயக்குநர் அஸ்வத்தோட ஒரு படம், அப்புறம் தமிழ் சினிமாவுல அதிகம் எதிர்பார்க்கப்படுற தேசிங்கு பெரியசாமி படத்திலயும் சிலம்பரசன் நடிக்கப்போறாரு.


Next Story

மேலும் செய்திகள்