`மாமன்' திரைப்படம் ஓடிய தியேட்டரில் கலெக்டர் விசிட்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 'மாமன்' திரைப்படம் ஓடிய தியேட்டரில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், டிக்கெட்டில் விலை குறிப்பிடாததால் அவற்றை ஆய்வுக்காக எடுத்து சென்றார்.
ராசிபுரம்–ஆத்தூர் சாலையில் உள்ள தியேட்டருக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, கேன்டீன் மற்றும் அவசரகால வழிகள், தீயணைப்பு சாதனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தியேட்டரில் வழங்கப்பட்ட டிக்கெட்டில் கட்டணம் எவ்வளவு என குறிப்பிடப்படாததால், அவற்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
