

கபடதாரி படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை நந்திதா இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, படக்குழு வெளியிட்டுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இந்த படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.