

அதன்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை சினிமா படப்பிடிப்பில் 75 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்து சுகாதார நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கபட்டுள்ளது அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், சானிடைசர்கள் அப்பகுதியில் வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது...உடல்வெப்பநிலையை பரிசோதிப்பது, 6 அடி இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் எனவும், முக கவசம், கையுறை ஆகியவற்றை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்காவது தொற்று அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் படப்பிடிப்பு நடத்தப்படும் பகுதிகள் கண்டிப்பாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.அழகு சாதன பொருட்களை குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்றும் வழிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.