சமீபத்தில் வெளியான ப்ரோஷன் 2 அனிமேஷன் திரைப்படம் உலக அளவில் 350 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விட அதிகம். வெளியாகி 4 நாட்களுக்குள் இத்தனை ஆயிரம் கோடி வசூலித்துள்ள இந்த திரைப்படம், சினிமா உலகில் புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.