யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக மோசடி

யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக மோசடி, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக மோசடி
Published on

சென்னை அருகே சிட்லபாக்கத்தை சேர்ந்த போஸ் என்பவர் தனது நண்பர் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து, படம் ஒன்றை எடுக்க முடிவு செய்திருந்தார். தயாரிப்பாளர்களான இவர்கள், படத்தில் பிரபல நடிகர் யோகி பாபு, நடிகை கேத்ரின் தெரசா ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். அவர்களிடம், கால்சீட் பெறுவதற்காக வடபழனி என்.ஜி.ஓ. காலனியில் அலுவலகம் நடத்தி வரும், அண்ணாதுரை என்பவரை அணுகி, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், அண்ணாதுரை, கால்ஷீட் வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டதாக, வடபழனி காவல் நிலையத்தில் போஸ் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com