தார்ப்பாய் வீட்டை இடித்து புது வீடு கட்டி கொடுத்த படக்குழு!

கண்ணூரில் உள்ள தலச்சேரியில் 'அன்போடு கண்மணி' என்ற மலையாளப்படம் உருவாகி வருகிறது. இதற்கான ஷூட்டிங், ஒரு எளிமையான தார்ப்பாயை கூரையாக கொண்ட வீட்டில் நடந்தது. பின்னர், படப்பிடிப்பிற்காக, அந்த தார்ப்பாய் வீடு இடிக்கப்பட்டு, புதுவீடு கட்டப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த புதிய வீட்டை அந்த ஏழை குடும்பத்திற்கே படக்குழுவினர் வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் விபின் பவித்ரன், இந்த வீட்டை வழங்கியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் நடிகரும் முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி கலந்துகொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com