Chinmayi | Perarasu | ``இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே'' - சின்மயிக்கு பேரரசு பதிலடி
எம்கோனே பாடலுக்காக வாங்கிய சம்பளத்தை பாடகி சின்மயி திருப்பி கொடுக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரவுபதி டூ படத்தின் எம்கோனே பாடல் சமீபத்தில் வெளியானது. இதனை பாடகி சின்மயி பாடியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். பெண்களுக்கும், பட்டியல் சாதியினருக்கும் எதிராக படமெடுக்கும் மோகன் ஜி படத்தில், பெண்ணுரிமை பேசும் சின்மயி எப்படி பாடலாம்? என்று கேள்வியும் எழுப்பியிருந்தனர். இந்நிலையில் தான் பாடியது தவறுதான் என்றும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் சின்மயி தெரிவித்தார். இதுகுறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ள இயக்குநர் பேரரசு, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே... பாடுவதற்காக தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு, உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம்! கொள்கையை விட பணமா முக்கியம்?“ என்று பதிவிட்டுள்ளார்.
