Chinmayi | Mohan G | மன்னிப்பு கேட்ட சின்மயி - பதிலடி கொடுத்த மோகன் ஜி
திரௌபதி - 2 படத்தில் பாடகி சின்மயி பாடியதால் சர்ச்சை
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்துல உருவாகியிருக்குற 'திரௌபதி - 2' படத்துல பாடகி சின்மயி பாடுன 'எம்கோனே' பாட்டால பெரிய சர்ச்சை கிளம்பியிருக்கு.
பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள தைரியமா தட்டிக்கேட்குற ஒரு பிரபலம்ன்னா அது சின்மயின்னு சொல்லலாம். இந்த நிலைல, சுயசாதிய மையமா வச்சு படங்கள எடுக்கும் இயக்குநர் மோகன். ஜி படமான திரௌபதி - 2ல பாடுனது ஏன், அப்டிங்குற கேள்வி தான் இப்ப இன்டெர்னெட் முழுக்க தீயா பரவிட்டு இருக்கு.
இது குறித்து, சின்மயி தன்னோட சமூக வலைதள பக்கத்துல, இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னோட 18 வருட நண்பர்ன்னும், அவர் கேட்டதுனால தான் இந்த பாட்ட பாடுனதாகவும் கூறியிருக்காங்க. மேலும், இந்த பாட்ட பாடும் போது அவர் அங்க இல்லன்னும், அதனால எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன்னு பதிவிட்டுருக்காங்க.
இந்த சர்ச்சைக்கு பதிலடி குடுக்குற விதமா இயக்குநர் மோகன்.ஜி, குறிவைக்க வேண்டியது நான் மட்டும் தான். என் கூட இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனம்ன்னு பதிவிட்டுருகாரு.
