

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் கோபிநாத். அவரது மனைவியும் துணை நடிகையுமான ரேகா தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருகிறார். தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த கோபிநாத், கிருஸ்துமஸ் விடுமுறை தினத்தன்று அலுவலகம் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில் கோபிநாத் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கோபிநாத்திற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்த தாகவும், இதை கண்டித்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.