கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் கேப்டன் என்று அழைப்பதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது, 1991-ல் வெளியான கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம். இந்த படம் அதிநவீன தொழில்நுட்பத்தில் புத்தம் புது திரைப்படத்திற்கு இணையாக புதுப்பிக்கப்பட்டு, 4K தரத்தில் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
Next Story
