பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கானின் திடீர் முடிவு "6 படங்களில் நடித்து விட்டு ஓய்வு பெறுவேன்" - மனம் திறந்த அமீர்கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கானின் திடீர் முடிவு "6 படங்களில் நடித்து விட்டு ஓய்வு பெறுவேன்" - மனம் திறந்த அமீர்கான்
Published on

பாலிவுட் திரைப்பிரபலங்களிலேயே மாறுபட்டு, வித்தியாச திரைக்கதையை தேர்வு செய்து நடித்து பெயர் பெற்றவர் நடிகர் அமீர் கான்...

லகான், ரங் கே பசந்தி, தாரே ஸமீன்பர், PK, தங்கல் போன்ற வித்தியாச கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதனை வெற்றிப்படமாக்கி, விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற பெருமை அமீர் கானை சேரும்....

அத்துடன் வித்தியாசமான படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தும் அமீர் கான், அண்மையில் லாபட்டா லேடீஸ் படத்தை இயக்கி கவனம் பெற்றிருந்தார்....

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில், அமீர் கான் நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை குஷிப்படுத்திய சூழலில், திடீரென தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அமீர் கான்.

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது 18 வயதில் தொடங்கி தற்போது வரை தன்னுடைய இளமை காலம் முழுவதையும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தியதால், குடும்ப வாழ்க்கைக்கு நேரம் செலவழிக்கவில்லை என கவலை தெரிவித்ததோடு, இது தவறு என கொரோனா காலத்தில் உணர்ந்ததாக பேசியுள்ளார்.

நேரம் செலவழிக்க முடியாத சூழலில் திருமணம் செய்திருக்கக் கூடாது என்றும், தற்போது யோசிக்கும் போது குற்ற உணர்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இனி 10 வருடங்கள் மட்டும் சினிமாவில் இருந்துவிட்டு, அதற்கு பிறகு, குடும்பத்துடன் மட்டுமே என் நேரத்தை முழுவதுமாக செலவிட போகிறேன்” என்று கூறியுள்ளார்.

அமீர் கானின் இந்த திடீர் முடிவுக்கு ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சினிமா துறைக்கு பேரிழப்பாகி விடும் என பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com