ரத்தம் வடிய..'வெறித்தனம்'பாடல் பாடிய சிறுவன் - மருத்துவர்களின் செயலால் நெகிழ்ச்சி

விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை போட்டு காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ள ருசிகர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
ரத்தம் வடிய..'வெறித்தனம்'பாடல் பாடிய சிறுவன் - மருத்துவர்களின் செயலால் நெகிழ்ச்சி
Published on

விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை போட்டு காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ள ருசிகர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் முதல் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகராக உள்ளார், விஜய்.... விஜய் ரசிகர் பட்டாளத்தில் குட்டீஸ்களுக்கும் தனி இடமுண்டு.... விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைக்காத நிலையில், விஜய்யின் பிகில் படம் பார்க்க வைத்து சிறுவனின் உயிரை காத்துள்ளனர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..சென்னை மயிலாப்பூரில் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், 10 வயது சிறுவன் சசிவர்ஷனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் அடிபட்டு உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனின் தலையில் தையல் போட வேண்டிய கட்டாயம்... அதற்காக மயக்க ஊசி செலுத்த மருத்துவர்கள் முயற்சித்த போது, ஒத்துழைக்க மறுத்து, ஊசியை சிறுவன் தட்டி விட்டுள்ளான்... குழந்தையை அதன் பாணியில் கையாண்ட மருத்துவர்கள்... பேச்சு கொடுக்க தொடங்கியுள்ளனர்... அப்போது தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று சிறுவன் கூற... பிடித்த படம் என்ன என்று அடுத்த கேள்வியை முன்வைத்தனர் மருத்துவர்கள்... தனது தலையில் இருந்து ரத்தம் வடிவதை பொருட்படுத்தாமல்... பிடித்த படம் பிகில் என சற்று யோசிக்காமல் பதிலளித்துள்ளார், அந்த சிறுவன்... உடனே மருத்துவர்கள் பிகில் படத்தை சிறுவனுக்கு செல்போனில் காட்டியுள்ளனர்... கொஞ்சம் கூட வலியை பொருட்படுத்தாமல் வெறித்தனம் பாடலை சிறுவன் பாட... அசரும் நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி, தையல் போட்டு சிகிச்சையை முடித்துள்ளனர், மருத்துவர்கள்...

X

Thanthi TV
www.thanthitv.com