மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள்

மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள்
மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள்
Published on

மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள்

மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவிற்கு, இன்று 48வது பிறந்த நாள். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக வலம் வந்த ஸ்வர்ணலதா, 1973 ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர். தனது 22 ஆண்டு கால திரை பயணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பத்தாயிரம் பாடல்களை பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தனது 37வது வயதில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அவர் மறைந்தாலும், அவரது குரல் இன்றும் பலரது விருப்ப பாடலாக ஒலித்து கொண்டிருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com