Actress Died | பிக்பாஸ் புகழ் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி..
பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா Shefali Jariwala மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42. பிரபல இசை வீடியோ காந்தா லகா Kaanta Laga மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஷெஃபாலி ஜரிவாலா புகழ்பெற்றார். இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது கணவர் Parag Tyagi உடனடியாக மும்பையில் உள்ள பெல்லூவ் Bellevue மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷெஃபாலி ஜரிவாலா திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
