'ஏலே' படம் வெளியீட்டில் சிக்கல் - உரிமையாளர்களை கண்டிக்கும் பாரதிராஜா

ஏலே படம் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையை படத்தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
'ஏலே' படம் வெளியீட்டில் சிக்கல் - உரிமையாளர்களை கண்டிக்கும் பாரதிராஜா
Published on

ஏலே படம் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையை படத்தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஹசீம் இயக்கி சமுத்திரகனி நடித்துள்ள படம் ஏலே. படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திரையரங்குகளும் வாழ வேண்டும் என்று, கோடி ரூபாய் வரை செலவு செய்து ஏலே படத்தை வரும் 12 ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் முற்படுகிறார் என்றும் 30 நாட்கள் வரை ஓடிடி தளத்தில் வெளியிடமாட்டேன் என்று கடிதம் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி கொடுப்பதை கண்டித்துள்ளார்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்க வேண்டாம் என்று விமர்சித்த அவர், ஏலே திரைப்படம் யார் தடுத்தாலும் மக்களை சென்றடையும். வெற்றியும் பெறும் என்று உறுதியளித்தார். திரையரங்குகளின் எதேச்சதிகாரத்தை முற்றிலும் தவிர்த்தால்தான் கலைத்துறை மீளும் என்றால் அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com