டைட்டானிக் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ் END GAME திரைப்படம் வசூலில் டைட்டானிக் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.
டைட்டானிக் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்
Published on
அவெஞ்சர்ஸ் END GAME திரைப்படம் வசூலில் டைட்டானிக் படைத்த சாதனையை முறியடித்துள்ளது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து தோன்றும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான 11வது நாளில், வசூலில் டைட்டானிக் படைத்த சாதனையை முறியடித்துள்ளது. இதுவரை இந்திய மதிப்பில் 15 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ள அவெஞ்சர்ஸ், உலக திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்துள்ள 2வது திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முதலிடத்தில் 'அவதார்' திரைப்படம் உள்ளது. அவதாரின் சாதனையையும் அவெஞ்சர்ஸ் விரைவில் முறியடிக்கும் என்று திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com