ஜிம்மில் 2 நடிகைகளுடன் ஒர்க் அவுட் - டிரெண்டாகும் ஆர்யா போட்டோ

ஜிம்மில் 2 நடிகைகளுடன் ஒர்க் அவுட் - டிரெண்டாகும் ஆர்யா போட்டோ

மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கி வரும் ஒரு படத்தில் நடிகர் ஆர்யா தற்போது நடித்து வருகிறார். இது நடிகர் ஆர்யாவின் நாற்பதாவது படமாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்யாவின் மனைவி சயீஷா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் ஆர்யாவின் பிறந்த நாளில் போடப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக கடந்து வருகின்றன.

காதல் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி சைதன்யா தனது இன்ஸ்டாகிராமில் ஆர்யாவுடன் ஜிம்மில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில், ஆர்யா நடுவில் இருக்க, ஒரு பக்கம் நடிகை வைஷ்ணவி சைதன்யா, மறுபக்கம் நடிகை நிகிலா விமலும் உள்ளனர். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், ஜிம்மில் இப்படி ஆட்டம் போடுறீங்களா என்றும், மனைவி கண்டுக்கா மாட்டாங்களா என கேட்டு வருகின்றனர். தற்போது இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com