சமூக வலைதளத்தில் பரவும் ஆர்யா - சாயிஷா வீடியோ

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமண வரவேற்பு விழாவில், திரையுலகினர் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
சமூக வலைதளத்தில் பரவும் ஆர்யா - சாயிஷா வீடியோ
Published on

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமண வரவேற்பு விழாவில், திரையுலகினர் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் 'கஜினிகாந்த்' படத்தில் ஒன்றாக நடித்தபோது, காதல் வயப்பட்டு, குடும்பத்தினர் சம்மதத்துடன், திருமணம் செய்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள பிரபல அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு மிக நெருங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

பிறந்த நாள் பாட்டு பாடியதால் சிரித்த ஆர்யா :

இந்நிலையில், ஆர்யா திருமணத்தின் போது நடந்த நிகழ்வு சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. ஆர்யா - சாயிஷா திருமணம் முடிந்தவுடன் கேக் வெட்டியுள்ளனர். அப்போது, அங்கிருந்த விருந்தினர்கள், 'ஹாப்பி பர்த்டே டூ யூ..' என பாடத் துவங்கி விட்டனர். அதை பார்த்த ஆர்யா - சாயிஷா சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com