விரைவில் `சார்பட்டா 2’ - அப்டேட் கொடுத்த (கபிலன்) ஆர்யா!
ஆகஸ்ட் முதல் மாதம் சார்பட்டா 2 படப்பிடிப்பு தொடங்க இருக்குறதா நடிகர் ஆர்யா சொல்லியிருக்காரு....
பா.இரஞ்சித் இயக்கத்துல ஆர்யா, கலையரசன், துஷாரானு பலர் நடிச்சி வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'.
கொரோனா லாக்டவுன் காரணமா 2021ஆம் ஆண்டு அமேசான் ஓடிடில நேரடியா வெளியான இந்த படத்தை ஃபேன்ஸ் கொண்டாடி தீர்த்தாங்க..
குறிப்பா படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருந்தா செம்மையா இருந்துருக்கும்னு இப்பகூட நிறைய பேரு FEEL பண்ணிட்டு வராங்க..
இப்படி இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்னாடி சார்பட்டா படத்தோட 2ம் பாகம் குறித்த அறிவிப்பை பா.ரஞ்சித் வெளியிட்டாரு...
சென்னையில நடந்த டிடி நெக்ஸ்ட் லெவல் பட பத்திரிக்கையாளர் சந்திப்புல படத்தை பட்டி கேட்டப்ப, ‘சார்பட்டா 2’ ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கரதாவும், ‘வேட்டுவம்’ படத்த முடிச்சிட்டு பா.ரஞ்சித் இந்தபட பணிகள தொடங்க போறதாவும் சொன்னாரு.
