AOT Movie| `ஆகாயத்தில் ஒரு தாரகை’ - ``இப்படி ஒரு படம் வருவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’

`ஆகாயத்தில் ஒரு தாரகை’ - ``இப்படி ஒரு படம் வருவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’

``ஆகாயத்தில் ஒரு தாரகை.. இப்படி ஒரு படம் வருவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’ - சின்னி ஜெயந்த் நெகிழ்ச்சி #aotmovie #aagayathilorutharagai #dulquersalmaan ஒரே நாளில் தனது படமும், தனது தந்தை படமும் ரிலீஸாவது குறித்து நடிகர் துல்கர் சல்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. துல்கர் சல்மான் நடித்துள்ள "ஆகாயத்தில் ஒரு தாரகை" திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துல்கர் சல்மான், தனது தந்தை மம்மூட்டி நடித்துள்ள தனுஷின் "ஓம்" திரைப்படமும், தான் நடித்துள்ள "AOT" திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் தனது படத்தையே அம்மா பார்ப்பார் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், டிசம்பரில் "வெயில்"’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதாகவும், இதுவரை 125-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் சின்னி ஜெயந்த், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பதைப் போல, ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண்

X